முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச.2 - தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜீ தலைமையில் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் அலுவலகங்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க (1.12.2011) கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில்,சென்னை ,தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலகங்களின் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டின் மேம்பாட்டிற்காக      தொடர வேண்டியமேல் நடவடிக்கைகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்கடன் ரூ.3000 கோடிக்கு மேல்  வழங்குதல், அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.600 கோடி       அளவிற்கு பயிர்கடன்  வழங்குதல், ரூ.25000 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்குதல், சுய உதவிக்குழுக்கள் கடன், வைப்பு தொகை திரட்டுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 15 கோடி அளவிற்கு கடன், 1100 பொதுச் சேவை மையங்கள் தொடங்குதல், வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மற்றும் வேளாண் சேவை மையங்களின் செயல்பாடுகள், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து கடன் பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள் செலுத்த வேண்டிய கடன் நிலுவை சூழல்,வங்கிகளின் வியாபார   வளர்ச்சி, விதைகள் மற்றும் உரம் விற்பனை, 100 வட்டத் தலைமையிடத்தில் கூட்டுறவு மருந்தகங்கள் அமைத்தல், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நுண்காப்பீட்டு திட்டம் தொடங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம் கட்டுமானப் பணி, கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்குதல், 4534 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணப்பரிமாற்றம், மின்னனு வங்கியில் திட்டத்தைச் செயல் படுத்துதல், கூட்டுறவு அச்சகங்களின் வியாபார முன்னேற்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் கூட்டுறவு த்துறையின் மானியக் கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் அறிவித்த அறிவிப்புகளின்        செயலாக்கம் குறித்தும், வருங்காலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அதன் வாயிலாக அவர்களின் தனிநபர் வருமானம் உயருவதற்கும், தமிழக முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார் எனவும், விவசாய பெருமக்கள் தங்களது விளைப்பொருட்களை இயற்கை சீற்றங்களி லிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க ரூ.107.26 கோடி செலவில் 1166 சேமிப்பு கிடங்குகள்  கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களை  எளிதில் அணுகி கடன் பெற இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்கடன் வழங்குவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு தேவையான சான்றளிக்கப்பட்ட விதைகள் கிடைத்திடவும், ரூ.850 கோடி     அளவிற்கு உரங்களை விற்பனை செய்திடவும், தடையின்றி உரங்கள் கிடைத்திடவும், வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மூலம் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை மேற்கொள்ளவும், பொது சேவை மையங்களின் மூலம் கிராமபுற மக்களுக்கும் கணினி சேவை வழங்கிடவும், கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் நியாயமான விலையில் ஏழை, எளிய மக்களுக்கு கிடைத்திடவும் வேளாண் சேவை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் அளித்தல் குறித்தும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஏழை,ஏளிய மக்களின் வாழ்வாதாரத்தை நினைவு செய்யும் வகையில் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள்  அனைத்தையும் சீரிய முறையில்  செயல்படுத்தி அனைவரும் பயன்பெற முழு ஈடுபாட்டுடன்                          செயல்படுவதோடு தமிழக முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி கூட்டுறவுத் துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத் தக்க வகையில் திட்டங்கள் வகுத்து செயலாற்றிட அமைச்சர் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை        செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ப. அண்ணாமலை, கூடுதல் பதிவாளர்கள், ந.அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், க.பெ.பன்னீர்செல்வன், இரா.ஜெயராம், இரா.கார்த்திகேயன், என்.சிவனருள், எம்.தர்மலிங்கம்,கே.பாலசுப்ரமணியன், மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்