முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்லாரி தொகுதி இடைத்தேர்தலில் ஸ்ரீராமுலு அமோக வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பெல்லாரி,டிச.- 5 - கர்நாடக மாநிலம் பெல்லாரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சுரங்க தொழில் முதலைகளான ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர் ஸ்ரீராமுலு அமோக வெற்றிபெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பி.கடிலிங்கப்பா டெபாசிட்டை காப்பாற்றும் அளவுக்கு மட்டுமே ஓட்டுக்கள் வாங்கி படுதோல்வி அடைந்துள்ளார்.  கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெல்லாரி தொகுதியில் ஸ்ரீராமுலு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர், ரெட்டி சகோதர்களின் நெருங்கிய ஆதரவாளர். ரெட்டி சகோதரர்கள் மீது சுரங்க ஊழல் புகார் காரணமாக பாரதிய ஜனதா நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராமுல், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதனையொட்டி பெல்லாரி தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா சார்பாக பி.காடிலிங்கப்பா, காங்கிரஸ் சார்பாக பி.ராம்பிரசாத்,சுயேட்சையாக ஸ்ரீராமுலு ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலின்போது பாரதிய ஜனதா உத்தரவை மீறி ரெட்டி சகோதர்களில் ஒருவரான சோமசேகரா பிரசாரம் செய்தார். மேலும் ஜனார்த்தன ரெட்டி, கருணாகரா ஆகியோரும் மறைமுகமாக ஸ்ரீராமுலுக்கு தேவையான உதவிகள் கிடைக்க செய்தனர். தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இதில் ஸ்ரீராமுலு 74 ஆயிரத்து 527 ஓட்டுக்கள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராம்பிரசாத்தைக்காட்டிலும் 46 ஆயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக பெற்றிருந்தார். பாரதிய ஜனதா சார்பாக போட்டியிட்ட கடிலிங்கப்பா வெறும் 17 ஆயிரத்து 366 ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருந்தார். இன்னும் ஒரு சில நூறு ஓட்டுக்கள் குறைந்திருந்தால் அவர் டெபாசிட்டை இழந்திருக்க வேண்டும். பெல்லாரி தொகுதியில் ஸ்ரீராமுலு மீண்டும் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிப்பதை காட்டுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்