முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகத்தான் இருக்கும் - பிரதமர்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜன.- 9 - நமது நாடு கஷ்டமான நேரங்களை கடந்துவிட்டது என்றும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து குறைந்து 7 சதவீதமாகவே இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின்  10-வது மாநாடு  நேற்று டெல்லியில் துவங்கியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கிட்டத்தட்ட 1,900 வெளிநாட்டு  வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்  நமது நாடு கஷ்டமான நேரங்களின் ஊடே  சென்று கொண்டிருக்கிறது  என்றார்.  ஒரு நாடு என்ற முறையில்  இந்த இக்கட்டான சவால்களை  நாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் கூட வருகிற மார்ச் மாதம் முடிய உள்ள நடப்பு நிதியாண்டில்  நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த  ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. இது மேலும் அதிகரித்து 9 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ரிசர்வ் வங்கியும்  மத்திய நிதி அமைச்சகமும் எவ்வளவோ நடவடிக்கைகளை  எடுத்து வந்தாலும்கூட  இந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்தே வருகிறது என்றும் அவர் கூறினார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அது 7 சதவீதமாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். உலக அளவில் பார்க்கும் போது கூட பொருளாதார வளர்ச்சியில் பல கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், நிவாரணம் அளிக்கவும்  மறுகுடியமர்த்தல் செய்யவும்  கேபினட் செயலாளர் தலைமையில் பன்னமைச்சக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு  புதிய பென்ஷன் திட்டம் ஒன்றையும்  பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்