முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா இந்திய பயணத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் வரவேற்பு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - ஒபாமா இந்திய பயணத்தை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கும்படி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதை ஒபாமாவும் ஏற்று கொண்டார். இதன் மூலம் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுகிறார்.
ஒபாமாவின் இந்த இந்திய பயணத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒபாமாவின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்தவும், நட்பை விரிவுபடுத்தவும் உதவும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆசன் ரைஸ் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமை விருந்தினராக கவுரவப்படுத்தப்படுகிறார். இது இரு நாடுகளுக்கு இடையேயான அடையாளம் என தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் டுவிட்டரில் கூ றியுள்ளார்.
சிக்கலான உறவு நிலவும் நிலையில் ஒபாமாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்ரபு மிகவும் கவுரவமான வாய்ப்பாகும் என ஓய்வு பெற்ற அமெரிக்க தூதர் டெரசிடா ஸ்காப்பர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தி வால் ஸ்டீரிட் ஜார்னல் என்ற இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார். தொடர்ந்து இரு நாட்டு உறவுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடையாளமே ஒபாமாவின் இந்திய பயணம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஜப்பான் பிரதமர் அபே சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்பட்டார். இந்த ஆண்டு விழாவுக்காக வருகை தருவதன் மூலம் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபராகிறார் ஒபாமா. மேலும் தனது பதவிக்காலத்தில் 2 முறை இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து