முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டங்களில் பங்கேற்க ஜப்பானுக்கு அழைப்பு

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை, பெங்களூரு, மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டங்களில் ஜப்பானும் அதன் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டுமென தமிழகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜப்பான் இந்திய வணிக ஒத்துழைப்புக்கான தலைவர் நியோ குரோவ்ஷி தலைமையிலான குழுவானது தமிழகம் வந்துள்ளது. சென்னையில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை அந்த குழு சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,
தமிழகத்தை அனைத்து தரப்பினரும் விரும்பும் சர்வதேச அளவிலான உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கமாகும். ஜப்பான் வெளியுறவு வர்த்தக அமைப்பு உட்பட பல்வேறு ஜப்பான் தொழில் அமைப்புகளுடன் தமிழக அரசு தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறது என்றார்.
முதல்வருடனான சந்திப்பின் போது சென்னை பெங்களூரூ, மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஜப்பானும், ஜப்பான் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், நிதித்துறை செயலாளர்(பொறுப்பு) உதயசந்திரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து