முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உறவுக்கு 'நோ'

சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள், தனக்கு குழந்தை வேண்டும் என்றால், தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளுமாம். இதற்கு காரணம், தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால்தான்.

இரு பாலருக்கும் தனித்தனி ஆடைக்கு எதிர்ப்பு

உலகம் முழுவதும் தற்போது புதிய போக்கு அதான் டிரெண்டிங் ஒன்று உருவாகி வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் பெண்களின் ஆடையை அணிந்து வந்த சிறுவனை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருபாலருக்குமான ஆடை விவகாரம் விவாதப் பொருளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி ஒன்றில் மாணவர்களை குட்டை பாவாடை அணிந்து வரச் சொன்ன சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் இதே போன்ற ஒரு சம்பவம் கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்கு பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என கண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Mason Boudreau என்ற 17 வயது மாணவன் பெண்கள் அணியும் டாப்ஸ், சார்ட்ஸ் என டூபீஸ் ஆடையில் வந்து பள்ளியை தெறிக்க விட்டுள்ளான். மேலும் இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பாலாருக்கு பாலின பாகுபாடு இல்லை என்கிற போது ஆடையில் மட்டும் பாரபட்சம் ஏன் என்ற கேள்வி உலகம் முழுக்க உரத்துக் கேட்கத் தொடங்கியுள்ளது.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

குரூப் காலிங் வசதி

மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம். வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.

இங்கிலாந்து பவுண்ட்ஸ்

இங்கிலாந்து வங்கி திங்களன்று ஒரு ட்வீட் மூலம் புதிய 5 பவுண்டு நோட்டுகளில் விலங்கு கொழுப்பு (animal fat) இருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கின்றது.இதை தொடர்ந்து சைவ உணவு உண்பவர்கள் பெரும் காட்டம் அடைந்துள்ளனர். அந்த நோட்டுகளை நீக்க வேண்டும் என ஒரு மனுவில் இது வரை சுமார் 19,000 பேர் கையெழுத்திட்டு வங்கியிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

நிலத்துக்கு அடியில் இருக்கும் அருவி எங்குள்ளது தெரியுமா?

உலகின் மிகப் பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி அமெரிக்காவில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.. அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள  ரூபி பால்ஸ் எனப்படும் இந்த அருவி தரைக்கு கீழே சுரங்கப் பாதைகளின் வழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளது. ஆம்... தரைக்கு கீழே குகைகளின் வழி பயணம் செய்தால் மிகவும் உயரமான பாறையிலிருந்து நிலத்தடி குகைக்குள் இந்த அருவி கொட்டுவதை பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும், அவ்வாறு இந்த அருவியில் நீர் கொட்டும் உயரம் மட்டும் எவ்வளவு தெரியுமா 1120 அடி... உலகின் புவியியல் அதிசயங்களில் ரூபி அருவியும் ஒன்றாகும். இதற்காக பிரத்யேக பூங்கா, தரைக்கு கீழே செல்லும் லிப்ட் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி மட்டுமின்றி, இந்த அருவி அமைந்துள்ள தரை கீழ் சுரங்க குகைகளும் ஒரு புவியியல் அற்புதங்கள்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்