முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

பெருகும் ஆதரவு

குறைந்த இணைய வேகமான 2ஜியைப் பயன்படுத்துவோர் ஃபேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த தொடங்கப்பட்டதுதான்  ஃபேஸ்புக் லைட். 50க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படும் இது, இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்.

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

கேரளாவுக்கு பெருமை

கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தள ங்களுக்கு பிரபலமான உணவு வகை களின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்டணும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்