முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்

அரைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து,மணிச்சத்து,புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. 

அரைக்கீரை மருத்துவத்திற்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.

அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது, குடல் புண்கள் விரைவில் குணமாகும். 

அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. 

அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உடல் வலுவை தரும்.

அரைக்கீரை வாத நீர்களையும் சரிசெய்கிறது.

அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.

அரைக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும்.

அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும்.

அரைக்கீரை உடன் வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டுவர குளிர் காய்ச்சல்,சளி,இருமல் தீரும்.

அரைக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்

அரைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.இருமல், தொண்டைப் புண் இவற்றை குணப்படுத்தும்.

அரைக்கீரை பிரசவம் அடைந்தப் பெண்களுக்கு இழந்த சக்தியையும்,பலத்தையும் தருகின்றது.

அரைக்கீரயை உண்பதனால் ஆண்மைக் குறைவிலிருந்து விடுபடலாம்.

தினசரி அரைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் தேமல் மற்றும் சொறி, சிரங்குகள் குணமாகும்.

விஷக்கடியை முறிக்கும் சக்தி அதிக அளவு அரைக்கீரையில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்