முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 77 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது: மத்திய அரசு

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் 77.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

2013ம் ஆண்டு இறுதி நிலவரப்படி கீழமை நீதிமன்றங்களில் 2.68 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 5 ஆண்டுகளுக்கும் மேல் 59.80 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி ஐகோர்ட்டுகளில் 44.56 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதில் 5 ஆண்டுகளுக்கும் மேல் 16.83 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10ம் தேதி நிலவரப்படி 11,861 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 15ம் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டின் முன்னிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக 1,321 ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் 19,518 நீதித்துறை அதிகாரிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதில் 15,115 பேர் மட்டுமே பணிபுரிந்தனர். நீதித்துறை அதிகாரிகள் ப தவியில் 4,40 3 காலியிடங்கள் இருந்தன. கடந்த 15ம் தேதி நிலவரப்படி பல்வேறு ஐகோர்ட்டுகளுக்கும் 984 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 631 நீதிபதிகள் மட்டுமே ப ணியில் உள்ளனர். ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பதவியில் 353 இடங்கள் காலியாக இருந்தன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து