முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு உதவி: ஜெயலலிதாவுக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மேற்கு வங்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை செளமிதா தேவுக்கு மருத்துவச்சிகிச்சைக்கு  ரூ 5 லட்சம் வழங்கி உதவிக்கரம் நீட்டிய மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடவடிக்கை விளையாட்டு வீரர்களிடையே நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று ஜிம்னாஸ்டிக் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதன் பொதுசெயலாளர் பிரபு , மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம்  வருமாறு: அண்மையில் மேற்கு வங்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை செளமிதா தேவு்கு தாங்கள் பெருங்கருணை உள்ளத்தோடு 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளீர்கள். இது எந்த மாநிலத்திலும் யாரும் செய்ய முடியாத பேருதவி. இதற்கு தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பாக எங்களின் மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் உரிதாக்கி கொள்கிறோம்.
இளமங்கை செளமிதா தே திறமையான வீராங்கனை மட்டுமல்ல: காமன்வெல்த் போட்டிகளின் போது நடுவராகவும் பணியாற்றியவர் . அத்துடன் தமிழகத்தில் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்.
 
இன்றைக்கு உடல் இயக்கமின்றி மேற்கு வங்க மருத்துவமனையில் மருத்துவ செலவுக்காக கூட வழியின்றி தவிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த செளமிதாவுக்கு தங்களின் உதவிக்கரம் மாநிலம் தாண்டி அருள் மாறி பொழிந்திருக்கிறது. இந்நிகழ்வு நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் மனதில் முன்மாதிரியையும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் நன்றி என்ற வார்த்தை கூட சிறியதாகி விட்டது. அதற்கு மேலாக என்ன இருக்கிறது என்ற வார்த்தைகளை இந்திய மொழிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் விளையாட்டு வீரா்கள் நமக்கு ஒன்று என்றால் அம்மா பார்த்து கொள்வார்கள் என்று நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தோற்றுவித்திருக்கிறது. இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து