முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனித உரிமை மீறல் விசாரணைக்கு தயார்: பொன்சேகா

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்கள் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்தன.

இறுதிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா, இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தினால் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இலங்கை ராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
 
இவர்களில் யாராவது தவறுகள் செய்திருக்கலாம். அப்படி அவர்கள் தவறு செய்தால் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பது சரியானதுதான். ராணுவத்துக்கு எதிரான எந்த விசாரணை வந்தாலும் அதை நாங்கள் சந்திக்க தயங்க மாட்டோம். எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து