முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் : ஆங் சான் சூகி- பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :   மியான்மர் ஆளும் கட்சியின் தலைவரும், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஆங் சான் சூகி பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது  இரு நாடுகள் தரப்பில், மின்சாரம், வங்கி, மற்றும் காப்பீடு துறைகளில்  உறவை மேம்படுத்த  3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் எண்ணெய் மற்றும் எரி வாயு வேளாண்துறை, புதுப்பிக்கதக்க சக்தி, சுகாதாரம் ஆகிய துறைகளில் உறவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மியான்மரில் 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. அந்த ஆட்சி கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அங்கு நடந்த பொதுத்தேர்தலில்  ஆங் சான் சூகியின் தேசிய ஜன நாயக லீக் கட்சி ஆட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகியின் நம்பிக்கைக்குரிய  ஹிதின் கா  மியான்மரின் ஜனாதிபதியாக உள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக ஆங் சான் சூகி உள்ளார்.

அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் முதன் முறையாக ஆங் சான் சூகி தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் கோவாவில் நடந்த பிரிக்ஸ் -பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டிற்கு பின்னர் அவர் நேற்று முன்தினம் டெல்லி வந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும்  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜூவுடன் பேசினார்.

சுஷ்மாவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது வேளாண் துறை, உள் கட்டமைப்பு துறைகளில் இந்தியாவின் உதவியை மியான்மர் எதிர்பார்க்கிறது என சூகி தெரிவித்தார். மியான்மர் மக்களின் வளச்ச்சிக்கு இந்தியா உதவும் என சுஷ்மா உறுதியளித்தார்.

ஆங் சான் சூகி நேற்று காலை பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது,ஆங் சான் சூகியின் ,பூரணத்துவமான தலைமை, தெளிவான இலக்கு , உறுதியான போராட்டம் ஆகியவற்றால் மியான்மரில் ஜன நாயக ஆட்சி மலர்ந்துள்ளது . அவரது செயல்பாடுகள் உலக நாடுகளை ஈர்த்துள்ளது என பிரதமர் மோடி ஆங் சான் சூகியை புகழ்ந்துரைத்தார். கோவாவில் நடந்த பிரிக்ஸ்-பிம்ஸ் டெக் மாநாட்டில் ஆங் சான் சூகி கலந்து கொண்டதற்கும் மோடி அவருக்கு நன்றி தெரிவித்தார். அந்த சந்திப்பின் போது, இரு நாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் உறவை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இரு நாடுகள் தரப்பில், மின்சாரம், வங்கி, மற்றும் காப்பீடு துறைகளில்  உறவை மேம்படுத்த  3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் எண்ணெய் மற்றும் எரி வாயு வேளாண்துறை, புதுப்பிக்கதக்க சக்தி, சுகாதாரம் ஆகிய துறைகளில் உறவை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா வந்த ஆங் சான் சூகியை பிரதமர் மோடி வரவேற்றார். இந்தியா சூகியின் இரண்டாவது சொந்த நாடு என்றும் அவர் தெரிவித்தார். சூகி டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்