முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேற்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. நேற்று இரவு 8.52 மணிக்கு நிறைவடைந்தது. அதையட்டி அண்ணாமலையார் கோவிலில் நேற்று பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பவுர்ணமி கிரிவலம் செல்ல நேற்று முன்தினம் இரவு உகந்த நேரம் என்பதால் இரவு 8.58 மணிக்கு தொடங்கினாலும் மாலை 4 மணியிலிருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 8.30 மணிக்கு பிறகு கிரிவலம் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. அண்ணாமலையர் கோவிலில் கா¬லிலிருந்தே நீண்ட வரிசையில் காதிருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் காத்திருந்தபிறகே தரிசனம் செய்ய முடிந்தது. அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவை நேற்று முன்தினமும் நேற்றும் ரத்து செய்யப்பட்டிருந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலப் பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களையும வழிபட்டு கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவில், ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் மற்றும் கிரிவலப் பாதையில் பலவேறு இடங்களில் அன்னதானம் மோர் பால் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுவை கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில் கோவில் நிர்வாகம், நகராட்சி, ஊராட்சிகள், ஆகியவற்றின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி சிறப்பு மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்