முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எஸ்பி எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் ,-விருதுநகரில் வான்முகில் தொண்டு நிறுவனம் சார்பில் ஆட்கடத்தல் சட்ட மசோதா  2016 குறித்த தென்மண்டல  அளவிலான கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீ ராம் ஜேபி மஹாலில்  நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன் ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல  அலுவலர் கனகராஜ் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நரசிம்மன் பங்கேற்றனர் .
                           கருத்தரங்கத்தில் , விருதுநகர் மாவட்ட எஸ் பி ராஜராஜன்  பேசுகையில் ,ஆட்கடத்தல் என்பது  அனைவரும் அறிந்த ஒன்றாகும் .. பாலியல் தொழில் செய்து வரும் பெரும்பாலான இளம் பெண்கள் ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் .மேலும் , குழந்தை மற்றும் பெண்களை கடத்தும் கும்பல்கள்  அவர்களை பாலியல் தொழில் மற்றும் கொத்தடிமைகளாக வெளிநாடுகளுக்கும் கடத்தும் அவலநிலை உள்ளது.ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டபிரிவுகளில் தண்டனை வழங்க  வேண்டும். ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பாதுகாப்பு  மற்றும்  மறுவாழ்வினை  வழங்கக்கூடிய முக்கிய அம்சம்கள்  நிறைந்த தனி சட்டம்  அவசியம் என்றார் .இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த வான்முகில் ,ஸ்பீச் ,ஓடம் தொண்டு நிறுவனங்களை பாராட்டினார் .
   கூட்டத்தில் ,ஓடம் ஜெயராஜ் ,ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு  சார்பு ஆய்வாளர் தென்றல் ,பேராசிரியர் சகாயராஜ் ,அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் ,கல்வியாளர்கள் ,குழந்தை உரிமை ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர் .ஜோசப் ராஜ் நன்றி கூறினார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்