முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொத்தடிமை மறுவாழ்வு நிவாரண நிதி உதவித்தொகை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரிப்பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து மீட்பு செய்து வந்த, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொத்தடிமை மறுவாழ்வு நிவாரண நிதி உதவித்தொகையாக தலா ரூ.19,000-க்கான காசோலையை கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,, வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.சரத்குமார் த/பெ.அய்யசாமி, நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன்ராஜ் த/பெ.நடேசன், ஆணைவாரி கிராமத்தைச் சேர்ந்த சுலோக்சனா கபெ.ஜெயக்குமார், ஜெயக்குமார் த/பெ.சாம்பமூர்த்தி ஆகிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த 4 நபர்கள் பல வருடங்களாக கொத்தடிமைகளாக திருவள்ளுர் மாவட்டத்தில் செங்கல்சூலையில் இருந்தனர். இவர்களை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர், திருவள்ளுவர் சார் ஆட்சியர் ஆகியோர் கண்டறிந்து மீட்டு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை அவர்களிடம் ஒப்படைந்தார்.இவர்களுக்கு கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,, கொத்தடிமைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 4 நபர்களுக்கும் தலா ரூ.19,000- வீதம் ரூ.76,000-க்கான காசோலையை வழங்கினார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்