முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக்கின் 40-வது பிறந்த நாள் - டுவிட்டரில் சச்சின் வாழ்த்து

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் 40-வது பிறந்த தினத்தன்று பலரும் சேவாகுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங், சேவாக்கை தங்கள் கால ரிச்சர்ட்ஸ் என்று புகழாரம் சூட்டினார். ஆனாலும் சேவாகின் லட்சிய ஆளுமை, கதாநாயக வீரர் சச்சின் வாழ்த்து கிடைப்பது போலாகுமா? சச்சின் டுவீட்டில் ருசிகரமாகப் பதிவிட, அதை விஞ்சும் வகையில் சேவாக் பதில் ருசிகர டுவீட் பதிவிட்டுள்ளார்.

சச்சின், சேவாகுடன் தான் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு தன் ட்வீட்டில் 141.211416441116464. இது ஜி.பி.எஸ். லொகேஷன் அல்ல, என் நண்பர் விரேந்திர சேவாக் இப்படித்தான் ரன்களை விளாசுவார்! ஹாப்பி பர்த் டே வீரூ. என்று பதிவிட்டு அசத்தினார்.

உலகின் நட்சத்திரமான சேவாக் விடுவாரா அவர் பதிலுக்கு எல்லையற்றது என்பதைக் குறிக்கும் குறியீட்டை இட்டு, சேவாக், இது வெறும் குறியீடு அல்ல, ரன்கள் அடிப்பதென்றால் நம் கடவுள் சச்சின் அப்படித்தான் ரன்கள் எடுப்பார். உங்களது படைப்பார்த்தமான வாழ்த்துக்களுக்கு நன்றி சச்சின் பாஜி என்று டுவீட் செய்து அசத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து