முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி அமைச்சர் உதயகுமாரின் கஜா புயல் அறிவுரைகள்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கஜா புயல் நம்மை நோக்கி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பது குறித்த அறிவுரைகளை வருவாய்த்துறை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். அதன் விபரம் வருமாறு:-இந்திய வானிலை மையம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் முகநூல் டுவிட்டர் செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். மின்கலம் முறையாக பராமரிக்கவும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கேட்கவும் மதிப்புமிக்கவைகளையும் ஆவணங்களையும் நீர் புகாத பெட்டிகளில் வைக்கவும், ஏழு நாட்களுக்குண்டான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்தல் வேண்டும். கயிறு, கைமின் விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள் மருத்துவ கட்டு கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும்.

வீட்டுக்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருக்கவும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் அறிவுரைகளுக்கும் வானொலியை கேட்கவும், தொலைக்காட்சி பார்க்கவும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல் மற்றும் டுவிட்டரை தொடரவும் வேகமான புயல் காற்று ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சேதப்படுத்தலாம் அதனால் அவற்றை மூடி வைக்கவும்மீனவர்கள் தங்களது படகுகளுக்கு இடையே போதுமான இடைவேளி விட்டு படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும்வெளியில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ அல்லது பாதுகாப்பான கட்டடத்திலோ தங்க வேண்டும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தங்கி இருக்க வேண்டும்.

கொதிக்க வைத்த குடிநீரை பருகவும் சுகாதாரமான உணவை உண்ணவும் அதிகாரபூர்வமாக அறிவுறுத்திய பின்பே வெளியே செல்லவும் அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் தேவை சுற்றுப்புறத்தினை சுத்தமாகவும் கிருமிநாசினிகளை தெளித்தும் வைக்கவும் பாம்பு கடி மற்றும் பூச்சி கடிகளின் மீது கவனம் தேவை மழைநீரில் செல்லும் போது தடியை எடுத்து செல்லவும் மரங்கள், மின்சார கம்பங்கள், கம்பிகள் மற்றும் பிற பொருட்களை கவனிக்கவும் செய்யக்கூடாதவை -வதந்திகளை நம்ப வேண்டாம்அமைதியாக இருக்கவும், பதற்றப்பட வேண்டாம்மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம் புயல் கரையை கடக்கும் போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம்புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னர் வாகனத்தில் பயணிக்கவும் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீர் என்று குறைந்தால் புயல் கடந்து விட்டதாக எண்ண வேண்டாம்.

ஏனென்றால் திடீர் என்று பலத்த சூறைக் காற்று மந்த நிலைக்கு பின் மீண்டும் வீசக்கூடும்.புயல் கரையை கடந்தது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டடங்களுக்குள் நுழைய வேண்டாம் ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகம் செய்ய வேண்டாம். மக்களை அச்சுறுத்தும் வகையில் பீதியை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து