முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை குறித்து முதன்மை தேர்தல் பயிற்றுநர்களுக்கு சிறப்பு பயிற்சி.

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது.அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில்  பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையிலும்,சிறப்பாக பணியாற்றும் விதமாக அரசு அலுவலர்களுக்கும்,பணியாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  எடுத்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும்  தேர்தல் முதன்மை பயிற்றுநர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சாரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் கையாளும் முறை குறித்து பயிற்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து தேர்தல் முதன்மை பயிற்றுநர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.  

 செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தில், தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 784 இடங்களில் 1,367 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும்  இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,, 1,800 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் ஆகியவற்றில் முதல்நிலை சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்காக மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 784 இடங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு  நடத்திட வேண்டும். இவ்விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், நிலை அலுவலர் தலைமையில் தலா 7 குழுக்கள் வீதம் மொத்தம் 28 குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் முதன்மை பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கையாளும் முறை மற்றும் செயல்பாடு குறித்து தெளிவு ஏற்படுத்திடும் வகையில் இப்பயிற்சி நடத்தப்படுகின்றது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அலுவலர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தி தங்களது பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் முறையே மாதிரி வாக்குப்பதிவு நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி,இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் .சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஷேக்முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  கண்ணபிரான் உட்பட அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் முதன்மை பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து