முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபர் ஜின்பிங்குக்கு தென்னிந்திய உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சீன அதிபர் ஜின்பிங்குக்கு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி தென்னிந்திய உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து வழங்கினார்.

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் மாமல்லபுரத்தில் பல்வேறு சிற்பங்களை சுற்றி பார்த்த பின்னர், அங்குள்ள கடற்கரை கோவிலில் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பரத நாட்டியம், கதகளி ஆகியவற்றை கலைஞர்கள் அரங்கேற்றினர். ராமாயண காவியம் பரதநாட்டியம் மூலம் அரங்கேற்றப்பட்டது. அந்த காட்சிகள் அனைத்தும் சீன அதிபருக்கு மொழிபெயர்த்து சுவைபட வழங்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய கலையான நாட்டியம் பற்றியும் சீன அதிபர் ஜின்பிங்க்குக்கு விளக்கப்பட்டது. பிரதமர் மோடியும் இந்திய நாட்டியம் பற்றி அவ்வப்போது ஜின்பிங்குக்கு விவரித்தார். இந்த நாட்டியம் மூலம் விளக்கப்பட்ட ராமாயண காவியத்தை இருதலைவர்களும் பெரிதும் ரசித்தனர். இதைத்தொடர்ந்து நடனக்கலைஞர்களுடன் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முடிவில் நாச்சியார் கோவில் அன்னவிளக்கு தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதியின் ஓவியம் ஆகியவற்றை சீன அதிபருக்கு பிரதமர் மோடி நினைவுப்பரிசாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தாஜ் ஹோட்டலில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்க்குக்கு இரவு விருந்து வழங்கினார் இந்த விருந்தில் இருநாட்டை சேர்ந்த தலா 8 பேர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சைவம் அசைவம் கலந்த உணவுகளும் சாம்பார், தக்காளி ரசம் குருமா, மற்றும் கவுனி அரிசி ஆகியவையும் பரிமாறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் சீன அதிபருக்கு இன்று காலை உணவாக இட்லி. தோசை, பொங்கல் பூரி ஆகியவை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து