முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு

வியாழக்கிழமை, 21 மே 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,538 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 121 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,538 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,192 ஆகவும், திரு.வி.க நகரில் பாதிப்பு எண்ணிக்கை 976 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து