முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தலைவர் லட்சுமணன் மறைவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பா.ஜ.க மூத்த தலைவர் லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான கே.என் லட்சுமணன்  உடல் நலக்குறைவால்  1.6.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை அடைந்தேன். கே.என் லட்சுமணன், பாரதிய ஜனதா கட்சியில் இரண்டு முறை தலைவராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து திறம்பட பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

கே.என் லட்சுமணன் சிறந்த பண்பாளராகவும் அனைவரிடமும் அன்பாக பழகும்  தன்மையுடையவராகவும் விளங்கியவர்.  லட்சுமணனின் மறைவு தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து