முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை: திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்குகிறது.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 21-ம் தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. இன்று கவச திவாசம், நாளை 20-ம் தேதி கவச பிரதிஷ்டை, 21-ம் தேதி கவச சமர்ப்பணம் நடக்கிறது. இந்த 3 நாட்களுக்கு மூலவர் மற்றும் உற்சவர் கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு மகாசாந்தி ஹோமம், மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வருகிறார்கள். இவ்வாறு திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து