முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ப்ரைஸ் விசிட் செய்த விஜய்சேதுபதி

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இனடர்நேஷனல் நிறுவனர்  கலைமகன்  முபாரக் தயாரிப்பில்  முகேன் சூரி பிரபு ஆகிய பல முன்னணி நடிகர்கள்  நடித்து இருக்கும் படம் வேலன் . இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும்  பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படி தனது முதல் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இந்நிறுவனம் தற்போது இரண்டாவது தயாரிப்பான இடி முழக்கம்  என்ற தலைப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் G.V .பிரகாஷ் குமார் & காயத்ரி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன் , மனோ பாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். வைரமுத்து வரிகளுக்கு ரகுநந்தன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தகவலறிந்த விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பு தளத்திலிருந்து எதிர்பாராத விதமாக  shooting spot வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

அவரை  தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் , இயக்குனார் சீனு ராமசாமி , படத்தின் ஹீரோ G.V .பிரகாஷ் குமார்  ஆகியோர் மகிழ்ச்சியுடன் வறவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து