முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-09-27

சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற தொகுதி-4ல் அடங்கிய வெவ்வேறு பதவிகளுக்கான 10,205 காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெற்ற போட்டித் தேர்வில் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்று, அதில் 10,205 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவை நனவாக்கும்  வகையில் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ள 10,205 இளைஞர்களுக்கு  முதல்வர் சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.

அரசின் பல்வேறு துறைகள், குறிப்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தட்டச்சர் - 3339, இளநிலை உதவியாளர் - 5278, கிராம நிர்வாக அலுவலர் - 425, 

வரி தண்டலர் - 67, புல உதவியாளர் - 19, சுருக்கெழுத்து தட்டச்சர் – 1077, என மொத்தம் 10,205 பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்றைய தினம் 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வினை  தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினர். 

இந்நிகழ்வில் அமைச்சர்கள்  இ. பெரியசாமி,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன்,  அர. சக்கரபாணி,  மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு,   அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) நந்தகுமார், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து