முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
Jail

Source: provided

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் இரவில் தங்கி இருந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபர், திடீரென மருத்துவமனையின் மகளிர் நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்தார். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டார். பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு திரண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைதுசெய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதிஷ் (வயது 28) என்பதும், வேலை தேடி சென்னை வந்த நிலையில், அவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து