முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      இந்தியா
School-Joining

Source: provided

ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.  

டில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், காலை வேளைகளில் அடா் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடும் குளிர் காரணமாக  ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மகர சங்கராந்திக்காக ஜனவரி 14-ம் தேதி அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நாளை மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், பரத்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மேக மூட்டம், மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு 15 மாவட்டங்களுக்கு அடர் பனிமூட்டம் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எனவே, கடும் குளிரால், ஒருசில மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓரிரு நாள்கள் முதல், நான்கு நாள்கள் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து