முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
Tairn 2023-05-25

சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19-ந் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். அந்தவகையில், தாம்பரம் ரெயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குமரிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன் பதிவுப் பெட்டியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

வாக்களிக்க செல்வோர் வசதிக்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. நேற்று இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு இன்று காலை 11.15க்கு திருநெல்வேலி செல்கிறது. மறுமார்கமாக இன்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து