முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது

புதன்கிழமை, 1 மே 2024      தமிழகம்
Kariyapatti 2024-05-01

Source: provided

விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதையடுத்த குவாரி உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்குவாரியில் எதிர்பாராத விதத்தில்  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்தன.

இந்நிலையில் கல்குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடப்பதாகயும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்குவாரியில் இருந்த 2 வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. 

மேலும்,  சில தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி  பொதுமக்கள் அந்த கல்குவாரியை மூடக் கோரி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் துரை, குருசாமி, கந்தசாமி உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி உரிமையாளர் சேதுராமன் என்பவர் சரணடைந்துள்ளார். இந்நிலையில், மற்றொரு குவாரி உரிமையாளர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் நேற்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து