முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Chennai-university

சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. 

சில கல்லூரிகள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. உளவியல் பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளன. மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியலை டேட்டா அறிவியல் பாடத்துடன் தொடங்கவும் சமூக பணி முதுநிலை பாடப் பிரிவை புதிதாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது. 

வருகிற கல்வியாண்டில் பி.காம் கார்பரேட் செகரட்டரிஷிப் படிப்பை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் வில்லியன் ஜாஸ்பர் தெரிவித்தார். ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

டேட்டா அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக தேவை உள்ளது என்றும் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்கு பிறகு பாடநெறி கிடைக்கும் என்றும் ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கூறினார்.

இது குறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில்,  வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து