முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி  தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டி உள்ளார். 

நீதிக்கட்சியின் தந்தை சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த தீரர். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர். 

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் - நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.  . 

முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில், ‘வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து