முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      இந்தியா
Gajendra-Singh-Shekhawat 20

Source: provided

புதுடெல்லி : தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாக பதில்களை அளித்துள்ளார். அதன் விவரம்: தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 2004 அக்டோபர் 12 அன்று தமிழுக்கும், 2005 நவம்பர் 25 அன்று சமஸ்கிருதத்துக்கும், 2008 அக்டோபர் 31 அன்று கன்னடத்திற்கும், 2008 அக்டோபர் 31 அன்று தெலுங்கு மொழிக்கும், 2013 ஆகஸ்ட் 8 அன்று மலையாளத்திற்கும், 2014 மார்ச் 11 அன்று ஒடியா மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

செம்மொழிகள் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவது அரசின் கொள்கையாகும். புதிய கல்விக் கொள்கை 2020, இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம், செம்மொழிகள் உட்பட அனைத்து மொழிகளையும் மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனம் தமிழ் மொழியை மேம்படுத்தி வருகிறது. 3 மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் சமஸ்கிருத மொழியை மத்திய அரசு மேம்படுத்துகிறது. சமஸ்கிருத மொழியில் பயிற்றுவிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் இந்த 3 பல்கலைக்கழங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

2014-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்: தமிழுக்கு ரூ.51.76 கோடி, மலையாளத்துக்கு ரூ. 3.71 கோடி, கன்னடத்துக்கு ரூ. 11.46 கோடி, தெலுங்குக்கு ரூ.11.83 கோடி, ஒடியாவுக்கு ரூ.3.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து