முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திலிருந்து மேலும் 77 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      தமிழகம்
Students 2024 07 22

Source: provided

சென்னை : முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட நிலையில் மேலும் 77 மாணவர்கள் சென்னை திரும்பினர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு கல்வி பயின்று கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் உடனடியாக இந்தியா திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர மாநில அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மாணவர்கள் 12 பேர், கடலூர் மாணவர்கள் 6 பேர், தருமபுரி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 மாணவர்கள், சேலத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சென்னை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர், ஈரோடு, திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 49 மாணவர்கள் கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா ஆகிய நகரங்களின் வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் மேலும் 77 மாணவர்கள் நேற்று தமிழகம் வந்தனர். மாணவர்களுக்கு விமான கட்டணம் முதல் அவர்கள் இல்லம் வரை சென்று சேரும் வரை அனைத்து செலவுகளையும் தமிழகத்தின் அயலகத்ததுறை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து