முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? - பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: தொடர்ந்து 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

திங்கட்கிழமை, 22 ஜூலை 2024      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை  தொடர்ந்து 7-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இன்று தாக்கலாகும் பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. 

கூட்டத் தொடர்...

பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 

அல்வா தயாரித்து... 

2024 – 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும் அல்வா தயாரித்து விநியோகிக்கும் நிகழ்ச்சி ஜூலை 16 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்கினார்.

அனைத்துக்கட்சி...

இந்நிலையில், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டம் நேற்று  முன்தினம் காலை 11 மணிக்கு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

7-வது முறையாக.... 

இதனை அடுத்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்கவுள்ளார்.

சாதனையை....

இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் 2-வது பதவிக் காலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.  அப்போது நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதன்பின் தொடர்ந்து 4 முழு பட்ஜெட்களையும்,  நிகழாண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்தார்.

புதிய அறிவிப்புகள்.... 

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட். இந்த பட்ஜெட் குறித்து தொழில்துறையினரும், சாமானிய மக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். வரி செலுத்துவோர் வரிச்சலுகையை எதிர்பார்க்கும் நிலையில், தொழில் துறையினரும் இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா ? என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்னதாக, 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை, மத்திய நிதிநிலை அறிக்கையில் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து