முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுல்தான்பூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்: ராகுல் மீதான அவதூறு வழக்கு ஆக. 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

லக்னோ : அவதூறு வழக்கு தொடர்பாக  உ.பி. மாநிலம் சுல்தான்பூர் கோர்ட்டில் ராகுல் காந்தி நேற்று ஆஜரான நிலையில் விசாரணை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ம் தேதி நடைபெறும் எனவும் அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, நேற்று காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, பின்னர் கார் மூலம் சுல்தான்பூர் கோர்ட்டுக்கு சென்றடைந்தார். ராகுல் காந்தியின் வருகையை அடுத்து நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. ஏராளான கட்சித் தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். பலர் அவர் மீது பூக்களைத் தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து