முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

படர்தாமரை,தோல் நோய்கள் நீங்க எளிய தீர்வு

  1. படர் தாமரை எனப்படும் தோல் நோய்க்கு என்ன மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதை காணலாம்.
  2. தோல் நோய் மற்றும் அலர்ஜி 13 முதல் 18வகை வகை உள்ளது.
  3. தோலில் நோய் வருவது,மூக்கில் நீர் வருவது, தோலில் அரிப்பு வருவது இவை அனைத்தும் அலர்ஜி எனப்படும் ஒருவிதமான ஒவ்வாமை ஆகும்.
  4. நமது உடலில் உள்ள கெட்ட நீர் மற்றும் அழுக்குகள்  வியர்வை மூலமாக வெளியேற்றப்படும்,இந்த வெளியேற்றம் தடை படும்போது அது அரிப்பு,கொப்பளம்,அலர்ஜி மற்றும் தோல் நோயை ஏற்படுத்துகிறது.
  5. நமது உடலை சுத்தமாக அழுக்கு மற்றும் கெட்டநீர் சேராமல் பார்த்துக்கொண்டால் இந்த தோல் நோயில் இருந்து நாம் தப்பித்துக்  கொள்ளலாம்.
  6. நமது உடலில் உள்ள மறைமுகமான பகுதிகளை நம் அதிக கவனமெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்,இதன் மூலம் தோல் நோய்யை வரும்முன் தடுக்க முடியும்.
  7. ஒரு பாத்திரத்தில்  பாசிப்பருப்பு மாவையும்,கடலை மாவையும் போட்டு பன்னீர் அல்லது எலுமிச்சம்பழச்சாறு சிறிதளவு ஊற்றி உடன் சிறிதளவு தயிர் அல்லது மோரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  8. இந்த கலவையை மறைவான பகுதிகள் உட்பட உடலின் அனைத்து பகுதிகளிலும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன் தடவிக்கொண்டு பின் குளிக்கும் போது மயிர் கால்களுக்கு இடையில் உள்ள அனைத்து விதமான கெட்ட நீர்கள் மற்றும் அழுக்குகளும் வெளியேறி அலர்ஜி மற்றும் தோல் நோய் வராமல் நம்மை பாதுகாக்கும்.
  9. கை,கால்,தொடை,அக்குள்,முகம் மற்றும் மறைவான அனைத்து இடங்களிலும் இந்தகலவையை தடவி நல்ல பயன் பெறலாம்.
  10. இதை செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி  ஈரத்தன்மை அகன்று நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு தோல் நோய் வருவதை தடுக்கிறது.
  11. இந்த மருத்துவமுறையை தொடந்து பின்பற்ற வேண்டும்,மேலும் கட்டாயம் சோப்பு போட்டு தான் குளிக்கவேண்டும் என்பவர்கள் முதலில் சோப்பு போட்டு குளித்து விட்டு பின்னர் இந்த கலவையையும் பயன்படுத்தி வந்தால் அலர்ஜி விலகும்.
  12. இதன் அடுத்தகட்டமாக ஏற்படுவது படர் தாமரை,இது கருப்பு சிகப்பு மற்றும் வெள்ளை கொப்பளங்கள் போல் ஏற்பட்டு அதிக எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும்.
  13. இவை சிறு சிறு வட்டமாகவும் பொரிப்பொரியாகவும் ஏற்படலாம்.
  14. இந்த படர் தாமரையை தடுக்க சிறிதளவு எலுமிச்சம் பழ சாறுடன், சிறிதளவு மஞ்சளை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து அதை தடவி வந்தால் குணம் பெறலாம்.
  15. கட்டி சூடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலந்து பூசினாலும் படர் தாமரை அகலும்.
  16. குளித்த பின் தோலில் ஏற்படும் வறண்ட தன்மையை இது சரிசெய்யும்.
  17. தோலின் நிறம் மாறி அதிக அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
  18. படர் தாமரை முற்றி வெண்மை கொப்பளம் ஏற்பட்டால் கருஞ்சீரத்தூளை இந்த கலவையில் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன்தரும்.
  19. இந்த மருத்துவ முறைகளை பின்பற்றி வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
  20. வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
  21. அதிகப்படியான வியர்வை மற்றும் மோசமான சுகாதார பிரச்சனைக் காரணமாக வேனல்கட்டி,வேர்க்குரு வருகிறது.
  22. கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
  23. வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். 
  24. வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
  25. சந்தனத்தை பன்னீர் கொண்டு குழைத்து உடைந்த கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி விடுவது சருமத்தை குளிர்விக்க செய்யும்.
  26. தினமும் இரு முறை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
  27. வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த துளைகள் அடைக்கும் போதுதான் வியர்வை தங்கி சிறு சிறு கொப்புளங்களாக சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
  28. வேர்க்குரு சிவப்பு நிறத்தில் அரிப்பும் நமைச்சலும் கொண்டு அதிக அசெளகரியத்தை உண்டாக்கும். 
  29. உடலில் நீரேற்றம் குறையாமல் தினசரி 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை தவிர்க்க செய்யும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வியர்வையையும் உஷ்ணத்தையும் தணிக்கும்.
  30. கோடையில் கிடைக்கும் நுங்கு அதிகம் சேர்க்கலாம்,இளநீர் தினசரி குடிக்கலாம், இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் தன்மை குறைந்து, வேர்க்குருவினால் ஏற்பட்ட அரிப்பும் சிவப்பு தோலும் மறைந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago