முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 பேரை சுட்டுக்கொலை: ஜார்ஜியாவில் கொலையாளிக்கு 180 ஆண்டுகள் சிறை தண்டனை

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      உலகம்
Gun 2023-10-05

வாஷிங்டன், 'ஜார்ஜியாவில் துப்பாக்கிச் சூடு நடத்தி நால்வரை கொன்ற, 14 வயது மாணவனின் தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 180 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்' என நீதிபதி கியூரி மிங்கிள் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என தெரிந்தது. மாணவனின் தந்தையான 54 வயதுடைய கொலின் கிரே மீது படுகொலை, இரண்டாம் நிலை கொலை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் மகனுடன், தந்தை ஆஜர் ஆனார்.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனது 14 வயது மகனுக்கு துப்பாக்கியைக் கொடுத்த குற்றத்திற்காக, அதிகபட்சமாக 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்கொள்ள நேரிடும். இரண்டாம் நிலைக் கொலைக் குற்றத்திற்காக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அதிகபட்ச தண்டனை என்பதால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நீதிபதி கியூரி அதிரடி அறிவித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். அதுவும் பள்ளி செல்லும் மாணவர்கள், துப்பாக்கியை கொண்டு செல்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, 46 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்க பள்ளிகளில் நடந்துள்ளன. ஜார்ஜியாவில் நடந்தது, 45வது சம்பவம். அதற்கு பிறகும் கூட, இன்னொரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்து விட்டது.இதற்கு தீர்வு தெரியாமல், அமெரிக்க போலீசாரும், அரசியல் கட்சியினரும் திணறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து