முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது நாளாக குறைந்தது தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.  தொடா்ந்து படிப்படியாக விலை குறைந்து வியாழக்கிழமை பவுன் ரூ. 51,440-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் விலை குறைந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,415-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையானது. நிதிநிலை அறிக்கையின் எதிரொலியாக 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது. வெள்ளி வியாழக்கிழமை விலையில் மாற்றமின்றி வெள்ளி கிராம் ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 89,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து