முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      இந்தியா
Modi-2024-07-09

Source: provided

டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இன்டியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மட்டும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 9வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். ஆனால், இன்று நடைபெற உள்ள இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.

அதன்படி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலபிரதேச முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். விதிவிலக்காக இன்டியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மட்டும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தபின் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேவேளை, நாடு சுதந்திரம்பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்குவது குறித்தும் நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து