முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் ஒலிம்பிக் 2024 அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      விளையாட்டு
Olympics 2024-07-08

Source: provided

பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கியது. உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணி, மகளிர் ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

அதேபோல 4 முறை தங்கம் வென்ற அமெரிக்கா அணி, ஜாம்பியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மொத்தமுள்ள 12 அணிகளில் நான்கு அணிகள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அமெரிக்காவும், ஜெர்மனியும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) மார்சேயில் சந்திக்கின்றன.

__________________________________________________________________

சிறப்பு டூடுல் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஜூலை 26) பாரீஸ் நகரில் அதிகாரபூர்வமாக துவங்கியது. திறப்பு விழா பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் நடைபெறும். கொடிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிறைவு விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்கத்தை சிறப்பு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்துடன் கூகுள் வெளியிட்டுள்ளது. தொடக்க விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, (ஜூலை 24) வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து மற்றும் ரக்பி ஆகியவற்றில் ஆரம்ப சுற்றுகளுடன் போட்டி தொடங்கியது. இந்திய அணி சார்பில் 70 ஆண்கள், 47 பெண்கள் உள்பட 95 பதக்கங்களுக்காக 69 போட்டிகளில் 117 போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

பாரிஸில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களில் ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஓவியத்துக்கான வடிவமைப்பாளரின் பெயரை கூகுள் வெளியிடவில்லை. பாரிஸ் வழியாக பாயும் செயின் நதியில் விலங்குகள் நீந்துவது போல அந்த சித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. 

__________________________________________________________________

இந்திய அணி இன்று மோதல்

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 நாடுகள் விளையாடுகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. ஏ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரான்ஸ் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை எதிர் கொள்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. பாரீஸ் ஒலிம்பிக்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________

ரயில்கள் மீது தாக்குதல்

பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என அந்நாட்டில் சில கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் வகையிலான பல சதிச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், உளவுப்படையினரின் உதவியுடனும், ராணுவம், போலீசாரின் கண்காணிப்புடனும் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டன. ஒலிம்பிக் துவக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் முன்னதாக, நேற்று முன்தினம் இரவு பாரீஸையும், மற்ற நகரங்களையும் இணைக்கும் ரயில் தண்டவாளங்களை கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தினர். 

அந்த ரயில் பாதைகளில் பல இடங்களில் அவர்கள் தீ வைத்தனர்; சில ரயில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கான ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒலிம்பிக் போட்டியை பார்க்க பல நாடுகளில் வந்திருந்த சுமார் 8 லட்சம் பார்வையாளர்கள், பாரீசுக்கு செல்ல முடியாமல் நகரத்துக்கு வெளியே தவிக்கின்றனர். சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் அங்கு நடந்து வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து