முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்

வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 2024      விளையாட்டு
India-Sri-Lagka 2024 07 26

Source: provided

பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சூர்யகுமார் கேப்டன்...

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று பல்லகெலேயில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரிங்குசிங், ஷிவம் துபே ஆகிய பேட்ஸ்மேன்களும், ஆல்-ரவுண்டர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உள்ளனர்.

ரோகித், கோலி ஓய்வு...

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர். 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதன்பின் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று 20 ஓவர் போட்டி தொடரை வென்றது. தற்போது பலம் வாய்ந்த இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இதில் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

ஆல்-ரவுண்டர்.... 

அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், சண்டி மால், நிசாங்கா, குசால் பெரைரா, பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஹசரங்கா, ஷனகா, பந்து வீச்சில் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷனா, பதிரனா ஆகியோரும் உள்ளனர். 

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், கலில் அகமது, ரவிபிஷ்னோய்.

இலங்கை அணி:

அசலங்கா (கேப்டன்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா, சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், ஷனகா, ஹசரங்கா, விக்ரமசிங்கே, பினுரா பெர்னாண்டோ, அஷிதா பெர்னாண்டோ, மதுஷனகா, பதிரனா, தீக்ஷனா, துனித் வெல்லலகே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து