முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பாக். பெண் : வலைதளங்களில் வீடியோ வைரல்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      உலகம்
America 2024 07 27

Source: provided

நியூயார்க் : விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ  வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள், தோழிகளுடன் அவர் ஓட்டலில் மிகப் பெரிய அளவில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார்.  

விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று அவர் பாடலுக்கு நடனமாடியும், பாடல்களைப் பாடியும் கொண்டாடினார். 

ஊதா நிறலெஹங்கா உடையணிந்து அவர் தோழிகளுடன் ஆடிப் பாடினார். அவரது கொண்டாட்ட  வீடியோ  வலைதளங்களில் வைரலாகிஉள்ளது. அவர் யாரென்ற விவரம்தெரியவில்லை. மேலும் எதற்காக அவர் விவாகரத்து பெற்றார் என்ற காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு,வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து