முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேச அனுமதி மறுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை  முதல்வர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களில் பலர் புறக்கணித்துள்ளனர்.

ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 

எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதல்வராக  பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆப் செய்து என்னை அவமதித்து விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். 

 இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரை பேச அனுமதிக்காதது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

நிதி ஆயோக் கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? இதுதான் கூட்டாட்சியா?எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு  முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து