முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் தொடர் தொடக்கம்:முதல் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை மோதல்

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

காயம் காரணமாக... 

முன்னதாக இலங்கை சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 3 டி20 போட்டிகளில் 3-0 என சூர்யகுமார் தலைமையில் அபார வெற்றி பெற்றது. அடுத்து இன்று முதல் (ஆக.2) ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரோகித் கேப்டனாக செயல்படுவார். விராட் கோலியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இளம் புதிய வேகப் பந்து வீச்சாளர்கள் மொகமது ஷிரஜ், ஈஷன் மலிங்கா அணியில் சேர்கப்பட்டுள்ளார்கள்.

பயிற்சியின்போது... 

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம், “மதுஷனகாவுக்கு இடது தொடயில் தசைப்பிடிப்பு (லெவல் 2) ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது ஃபீல்டிங் செய்யும்போது இந்த காயம் ஏற்பட்டது. பதிரானாவுக்கு வலது தோள்பட்டையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. இது 3ஆவது டி20யில் கேட்ச் பிடிக்கும்போது இந்த காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது” எனக் கூறியுள்ளது. ஒருநாள் தொடரில் குசல் ஜனித் பெரேரா, பரமோத் மதுஷன், ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் அணியில் கூடுதல் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னதாகவே துஷ்மந்தா சமீரா, நுவான் துஷரா டி20 தொடரிலேயே பங்கேற்கவில்லை. தற்போது ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுகிறார்கள். 

இலங்கை அணி: 

சரிதா அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷன் மதுஷ்கா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாகே, சமித் கருணாரத்னே, அகிலா தனஞ்செயா, மொகமத் ஷிரஜ், மகேஷ் தீக்‌ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ, ஈஷன் மலிங்கா. கூடுதல் வீரர்கள்: குசல் குசல் ஜனித் பெரேரா, பரமோத் மதுஷன், ஜெஃப்ரி வண்டர்சே

தொடர் பயிற்சி...

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஓய்விலிருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றியிலிருந்து நகர்ந்து அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னேறி செல்ல...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தது நன்றாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவது, நல்ல உணர்வைத் தருகிறது. தில்லி மற்றும் மும்பையில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அதிலிருந்து நாங்கள் நகர்ந்து செல்ல வேண்டும். தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.

பெரிய தொடர்... 

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் நடந்ததும் அதுவே. அந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளித்தது. இருப்பினும், அதிலிருந்து நகர்ந்து டி20 உலகக் கோப்பைக்குத் தயாரானோம். தற்போது டி20 உலகக் கோப்பை நிறைவடைந்துவிட்டது. அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். மிகப் பெரிய தொடர் வரவிருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து