முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

192 நாள்களுக்கு பிறகு சீனா விண்வெளி வீரர்கள் 3 பேர் பூமிக்கு திரும்பினர்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      உலகம்
China 2024-11-04

பெய்ஜிங், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்துள்ளது. தியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதி கடந்த 2021 ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி, யெ குவாங்ஃபூ, லீ கோங், லீ குவாங்சூ ஆகிய மூன்று வீரர்களை அனுப்பினர். இவர்கள் கடண்டஹ் 192 நாள்களாக விண்வெளியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3ஆம் தேதிகளில் விண்வெளியில் நடந்து சென்று சாதனை படைந்தனர். மேலும், உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தியாங்காங் விண்வெளி நிலையத்தை தாக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை பொருத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 1.24 மணியளவில் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கினர். வடசீனாவில் உள்ள டோங்ஃபெங் இறங்கும் தளத்தில் அவர்கள் வந்த ஷென்சோ-18 கலன் வெற்றிகரமாக தரையிறங்கியது. 192 நாள்கள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு வந்த மூவரும் நலமாக இருப்பதாகவும், ஷென்சோ-18 திட்டம் வெற்றிபெற்றதாகவும் சீன விண்வெளித் துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து