முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சி இருக்கும் : பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்வா மாவட்டத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. தடைகள் ஏற்படுத்திய போதும், மத்திய அரசு முயற்சி பல்வேறு முயற்சி மேற்கொண்டு மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது. ஜார்க்கண்டில் இரட்டை இன்ஜின் அரசு ஆட்சி அமைக்கும். இங்கு ஆட்சி அமைத்த பிறகு, மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் நடக்கும். 

அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு முக்கியமானவை, இது ஜார்க்கண்ட் மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான நேரம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி.,பிரிவினருக்கு 16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

ஜார்க்கண்டில் மோசடிகள் தொழிலாக மாறியுள்ளன, பல இளைஞர்கள் உயிர் இழந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தனது கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பது, வாய்ப்புகளை வழங்குவது அரசின் பொறுப்பு. 

ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. ஜார்க்கண்டின் வசதி, பாதுகாப்பு, செழிப்பு போன்ற உத்தரவாதத்துடன் பா.ஜ,, களமிறங்கி உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சேர்ப்பில் முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்றவை வாடிக்கையாகி விட்டது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து