முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம் : எல்காட் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

கோவை : முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். கள ஆய்வுப்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோவையில் இருந்து தொடங்க உள்ளார். 

இன்றும், நாளையும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை செல்கிறார்.  கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார். 

மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப் பணியின் ஒரு அங்கமாக முதல்வர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.

மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார். தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். 

தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் (6-ம் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். 

தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 

மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் வருகையை யொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து