முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடகை பாக்கி விவகாரம்: யுவன்சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க முடிவு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      சினிமா
Yuvanshankar-Raja 2024 08 1

Source: provided

 சென்னை : வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

 சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல் ஜமீலா என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோ நடத்தி வந்துள்ளார்.  

வீட்டின் உரிமையாளர் துபாயில் தங்கியுள்ளார். மாத வாடகை ரூ.1.25 லட்சம் என்றும், அட்வான்சாக ரூ.12 லட்சம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சில மாதங்களுக்கு பிறகு வீட்டின் வாடகை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18 லட்சம் வாடகை பணத்தை யுவன் சங்கர் ராஜா கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் உரிமையாளர் தனது வக்கீல் மூலம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு மொத்த வாடகை பாக்கி ரூ.18 லட்சத்தில் ரூ.12 லட்சம் பணத்தை காசோலையாக யுவன் சங்கர் ராஜா வழங்கியுள்ளார்.

மீதமுள்ள ரூ. 6 லட்சம் பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை பணம் ரூ.14 லட்சம் மற்றும் ஏற்கெனவே கொடுக்க வேண்டிய ரூ. 6 லட்சம் பாக்கி என மொத்தம் ரூ.20 லட்சம் பணத்தை கொடுக்காமல் யுவன் சங்கர் ராஜா வீட்டை திடீரென காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த வீட்டின் உரிமையாளரான பஷீலத்துல் ஜமீலா, ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், பஷீலத்துல் ஜமீலாவின் உறவினர் முகமது ஜாவித் என்பவர் மூலம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் யுவன் சங்கர் ராஜா மீது  புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து