முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்; இங்கிலாந்து அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

லண்டன் : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோக்ஸ் இல்லை...

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஸ்டோக்ஸ் காயம் அடைந்ததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

ஜேக் க்ராவ்லி காயம்... 

அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்த லெவனில் ஜேக் க்ராவ்லி காயம் காரணமாக இடம் பெறவில்லை. அதேவேளையில் மேத்யூ பாட்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்; டேன் லாரன்ஸ், பென் டக்கட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், ஷோயப் பஷீர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து