முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தின் விலை ரூ.10,000: முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, கலைஞர் கருணாநிதி உருவம் பதித்த ரூ.100 நாணயத்தின் விலை ரூ.10,000 என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி. சங்கரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரைவில் பேசியதாவது: நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம்.100 ரூபாய் நாணயம்தான், ஆனால் அதன் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது.

யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், காந்தி நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நான் 1 லட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 லட்சம் என்ன, 10 லட்சம்கூட கொடுத்து வாங்கிக் கொள்வார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார்.

வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. அன்றிரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து