முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

சென்னை : முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 

அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய மூவரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. 

மூவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து